முதல் கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு

இதுகுறித்து அமைச்சர் மா.சு. கூறும்போது, ’’அரசின் முடிவை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்கின்றனர். விரைவில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் 724 பேர், விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 

2024ஆம் ஆண்டில் மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் மொத்தம் 4825 செவிலியர்கள், நிரந்தரமாகப் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஏற்கெனவே 2 கட்டமாக செவிலியர்கள் உடன் அமைச்சர் மா.சு. பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இன்று காணொலியில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.