புதுச்சேரி: புதுச்சேரியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசே தத்தெடுத்து உயர்கல்வி வரை அரசின் உதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். தற்போது வரை புதுச்சேரியில் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு அரசு சார்பில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உணவுகளுக்கான உதவித்தொகை வழங்க பரிசளிக்கப்பட்டு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.


மேலும், புதுச்சேரியில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர், நிதியமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பேசிய தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கரசூர், சேதராப்பட்டில் 750 ஏக்கர் விளைநிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் அமையாத நிலையில், முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க இடம் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார மண்டலம் அமைக்க தேர்வான இடத்தில் ஆலைகள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.