மேலும் அறிய

ஆயிரம் கனவுகளின் விமானம் நிகழ்ச்சி.. ஆசிய சாதனைப் படைத்த பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம்!

பெரியார் மணியம்மை கல்வி நிறுவனமானது தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின் விமானம்” என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 27 பள்ளிகள் மற்றும் 2  பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கேற்றன.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின் விமானம்” என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வானது இந்தியா புக் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ரெக்கார்ட்ஸ் முயற்சியாக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரிடையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் 27 பள்ளிகள் மற்றும் 2  பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து 1932 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இது கல்வி மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஆரா ஏரோஸ்பேஸ் குழுவினரால் தள ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் பங்கேற்பாளர்களின் பதிவு மற்றும் கைமுறையில் கிளைடர் (Glider) உருவாக்கும் பயிற்சி நடைபெற்றது. மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் குழுப்பணி திறன்களை வெளிப்படுத்தி கைமுறை கிளைடர்களை வடிவமைத்து தயாரித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டிரோன் விமானக் காட்சி நிகழ்ச்சி சிறப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியானது பல்கலைக்கழக துணை வேந்தர் வெ.இராமச்சந்திரன் வரவேற்புரை மூலம் தொடங்கியது. அவர் சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்று அறிமுகம் செய்தார். மாணவர்களின் பெரும் பங்கேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே வெற்றிக்கான வழிகாட்டிகள் என வலியுறுத்தினார். முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட டி. கே. சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற விஞ்ஞானி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூரு, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று உரையாற்றினார்.

மேலும் வாழ்க்கையை ரசித்தபடியே எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அறிவை சேமிப்பது எதிர்காலத்திற்கான முதலீடு போன்றது என்றும் விளக்கினார். சந்திரனில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் பெருமையை எடுத்துரைத்த அவர், மாணவர்கள் ISRO வில் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.

IIT திருப்பதி தொழில்நுட்ப புதுமை மையம் (IIH)-இன் டாக்டர் அபிஜித் தேவானந்தம், நிறுவனம் புதுமை மற்றும் நடைமுறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளிக்கும் ஆதரவினை பாராட்டினார். மாணவர்கள் தங்களுக்கென ட்ரோன்களை உருவாக்க வேண்டும் என்றும், புதுமையான யோசனைகளுடன் திட்டங்களை முன்னெடுக்க மாணவர்களுக்கு தொழில் முனைவோராக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

செயற்குழு உறுப்பினர் முனைவர் வீ. அன்புராஜ் கிளைடர் பறப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், 2019 ஏப்ரல் 21 அன்று PMIST-இல் 15 பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட "SKI NSLV மணியம்மையார் செயற்கைக்கோள்” மூலம் பெற்ற ஆசியா புத்தக சாதனையை நினைவுகூர்ந்தார். விண்வெளி பொறியாளர்களுக்கு வானமே எல்லை அல்ல என்றும், சரியான கட்டமைப்பு இருந்தால் எதையும் பறக்கச் செய்ய முடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்குவித்தார். தொடர்ந்து, முதன்மை விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீர்ப்பாளரான எஸ். சகாயராஜ், சாதனை அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கைமுறை கிளைடர்கள் பறக்கவிடப்பட்ட சாதனையாக, 1932 மாணவர்கள் 966 கிளைடர்களை பறக்கவிட்ட சாதனைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாக அறிவித்தார். இந்த சாதனை, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின், விண்வெளி பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஐ. கார்த்திக் சுப்ரமணியன் நன்றியுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆரா ஏரோஸ்பேஸ் மதுரை நிறுவனத்தால் FPV மற்றும் வேளாண் ட்ரோன் காட்சிகள், மேலும் RC ட்ரோன் பந்தயங்கள் நடத்தப்பட்டன. "ஆயிரம் கனவுகளின் விமானம்" நிகழ்ச்சி, மாணவர்கள் பெரிய கனவுகளை காணவும். தைரியமாக புதுமைகளை முயற்சிக்கவும், விண்வெளித் துறையில் உள்ள பரந்த வாய்ப்புகளை ஆராயவும் ஊக்கமளித்தது.

இந்நிகழ்வு, எதிர்கால பொறியாளர்கள் மற்றும் புதுமையாளர்களை உருவாக்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின். நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா பி.கே.ஸ்ரீவித்யா பேராசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget