சென்னையில் தொடங்கிய ஆசிரியர்கள் போராட்டம்

Continues below advertisement

டிட்டோஜேக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு ஆசிரியர் இயக்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து டிபிஐ வளாகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல உள்ளனர். பின்பு, அங்கேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதற்கு அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இதை அடுத்து போலீஸார், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Continues below advertisement

எதற்காக இந்தப் போராட்டம்?

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் தரப்பில் கூறும்போது, ''எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் முதல் கட்டமாக அமைச்சர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் காத்திருப்புப் போராட்டத்துக்கு திட்டம்

முன்னதாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுக்க உள்ளனர்.