சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத் திறன் கொண்ட ஊழியர்கள் என திரும்பும் திசையெல்லாம் போராட்டம் நடத்தப்பட்டும் வரும் சூழலில், தமிழக அரசு தலைவலியில் உள்ளது.

Continues below advertisement

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த திமுக

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கிடையே 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ஆளும் திமுக அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருந்தது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. எனினும் இவை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்று கூறி பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைவலியில் தமிழக அரசு 

குறிப்பாக ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத் திறன் கொண்ட ஊழியர்கள் என திரும்பும் திசையெல்லாம் போராட்டம் நடத்தப்பட்டும் வரும் சூழலில், தமிழக அரசு தலைவலியில் உள்ளது. தேர்தல் நேரத்தில் அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Continues below advertisement

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 5ஆம் நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் கைது, அரசு ஊழியர்கள் போராட்டம்,  தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் கைது, பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,  மாற்றுத்திறனாளி பணியாளர்கள் போராட்டம் என எங்கு பார்த்தாலும் போராட்டச் செய்திகள் நிரம்பி வழிகின்றன.

தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு

இந்த நிலையில், அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டும் தேர்தலை மனதில் வைத்தும் தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜனவரி 6ஆம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.