தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் விலங்குகள் நல வாரியப் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலை, இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

சென்னை கால்நடை மருத்துவக்‌ கல்லூரி உள்ளிட்ட 6 கால்நடை மருத்துவக்‌ கல்லாரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையங்களில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌  கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

எத்தனை ஆண்டுகள்?

பிவிஎஸ்ஸி & ஏஎச்‌ (BVSc & AH) படிப்புகள் மொத்தம் ஐந்தரை ஆண்டுகளுக்குப் படிக்கப்பட்டு வருகின்றன. நான்கரை ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு உள்ளுறைப் பயிற்சி அவசியம் ஆகும். 

இத்துடன்  உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழிவள தொழில்நுட்பப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதுபற்றிய விவரம்!

B.Tech. - Food Technology

உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். 

BTech – Dairy Technology 

பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக்.டய்ரி டெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். எனினும் முந்தைய படிப்புகளைக் காட்டிலும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.  

இதற்கிடையே பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) B.V.Sc. & A.H. and B.Tech. (Food Technology/ Poultry Technology/ Dairy Technology) ஆகிய படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

BTech – Poultry Technology

கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் படிப்பும் மொத்தம் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது.  

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் விலங்குகள் நல வாரியப் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலை, இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஏதேனும் முரண்பாடுகள், குறைகள் இருந்தால், ஜூலை 14 முதல் 16ஆம் தேதி வரை ஆட்சேபிக்கலாம். அதைப் பரிசீலித்து, பல்கலைக்கழகம் இறுதி தரவரிசைப் பட்டியலை வெளியிடும்.

தர வரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?

  1. tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. முகப்புப் பக்கத்தில், “UG Admission” இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. ஒரு புதிய பக்கம் தோன்றும்; தொடர்புடைய சேர்க்கை இணைப்பை மீண்டும் கிளிக் செய்யவும்.
  4. பாடநெறி சார்ந்த தரவரிசைப் பட்டியல்கள் காட்டப்படும் பக்கத்திற்கு நீங்கள் அனுப்பி விடப்படுவீர்கள்.
  5. உங்கள் பாடநெறி மற்றும் வகைக்கு ஏற்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  6. தரவரிசைப் பட்டியல் திரையில் காட்டப்படும்.
  7. எதிர்கால குறிப்புக்காக, தரவரிசைப் பட்டியல் பக்கத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tanuvas.ac.in/