கால்நடைஇளநிலைமருத்துவப்படிப்புகளுக்குவிண்ணப்பிக்க ஜூன் 21ஆம்தேதிகடைசியாக இருந்த நிலையில், அவகாசத்தை ஜூன் 28 வரை நீட்டித்துதமிழ்நாடுகால்நடைமருத்துவஅறிவியல்பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கால்நடை மருத்துவம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேபோலபிவிஎஸ்சி & ஏஎச் (BVSc & AH) படிப்புகள்வழங்கப்பட்டுவருகின்றன. இவற்றுக்கு நான்கரைஆண்டுகள் படிப்புமற்றும் 1 ஆண்டுஉள்ளுறைப்பயிற்சிஅவசியம்ஆகும். இவை தவிர்த்து வேறுசில படிப்புகளும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
B.Tech. - Food Technology
உணவுத்தொழில்நுட்பப்பட்டப்படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னைஉணவுமற்றும்பால்வளத்தொழில்நுட்பக்கல்லூரியில்கற்பிக்கப்படுகிறது. இந்தப்படிப்புக்கு 4 ஆண்டுகள்அவகாசம்ஆகும்.
BTech – Poultry Technology
கோழியினதொழில்நுட்பப்பட்டப்படிப்பு, ஓசுர்கோழியினஉற்பத்திமற்றும்மேலாண்மைக்கல்லூரியில்கற்பிக்கப்படுகின்றது. இந்தப்படிப்பும்மொத்தம் 4 ஆண்டுகளுக்குக்கற்பிக்கப்படுகின்றது.
BTech – Dairy Technology
பால்வளத்தொழில்நுட்பப்பட்டப்படிப்பு (பி.டெக்.டய்ரிடெக்னாலஜி) படிப்பு, சென்னைஉணவுமற்றும்பால்வளத்தொழில்நுட்பக்கல்லூரியில்கற்பிக்கப்படுகிறது. இந்தப்படிப்புக்கு 4 ஆண்டுகள்அவகாசம்ஆகும். எனினும்முந்தையபடிப்புகளைக்காட்டிலும்குறைவானஇடங்களேஒதுக்கப்படுகின்றன.
இதற்கிடையே பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும்பி.டெக். (உணவுத்தொழில்நுட்பம் / கோழியினத்தொழில்நுட்பம் / பால்வளத்தொழில்நுட்பம்) B.V.Sc. & A.H. and B.Tech. (Food Technology/ Poultry Technology/ Dairy Technology) ஆகியபடிப்புகளுக்கானமாணவர்சேர்க்கைஜூன் 3ஆம் தேதிதொடங்கியது.
கால்நடைமருத்துவப்படிப்புகளில்சேரஜூன் 21ஆம்தேதி 5 மணிவரைஇணையத்தில்விண்ணப்பிக்கலாம்என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த அவகாசம் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடுகால்நடைமருத்துவஅறிவியல்பல்கலைக்கழகம்மாணவர் சேர்க்கை தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’இதுவரை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது ’’என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: http://www.adm.tanuvas.ac.in/
