பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட டெட் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும்போது, ‘’ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026, நாள் 13.02.2026 இன்படி 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 04.07.2026 அன்றும் தாள் II, 05.07.2026 அன்றும் நடைபெற்றது.

உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I -இல் 59,534 தேர்வர்கள் தேர்வை எழுதினர். தாள் II இல் 1,60,925 தேர்வர்கள் தேர்வை எழுதினர்.

Continues below advertisement

தற்போது, தாள் I மற்றும் தாள் II-க்கான உத்தேச விடைக் குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபணைகள் Objection Tracker URL ( https://trb1.ucanapply.com/ )  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று (15.07.2026) வெளியிடப்பட்டது.

ஒரு வார கால அவகாசம்

உத்தேச விடைக்குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 15.07.2026 முதல் 22.07.2026 5.30 மணி வரை ஆட்சேபணைகளை உரிய ஆதாரங்களுடன் தங்கள் Dash Board-இல் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக் குறிப்புகளுக்கான உரிய சான்று ஆவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எதெல்லாம் ஏற்கப்படாது?

தபால், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அம்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் அடிப்படையிலான ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள், ஆதாரங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

எனவே, தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் Dashboard-ல் உத்தேச விடைக்குறிப்புகளை காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விடைக் குறிப்புகளைக் காண்பது எப்படி?

தேர்வர்கள் https://www.trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-1044&language=LG-1 என்ற இணைப்பை க்ளிக் செய்ய் வேண்டும்.

https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் செய்து உரிய கேள்விகளை ஆதாரங்களுடன் ஆட்சேபிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு:  1800 425 6753  (10:00 am – 05:45 pm)

இ மெயில் முகவரி: trbgrievances[at]tn[dot]gov[dot]in