காஞ்சிபுரம் மாவட்டம் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 15-வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு 

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதல் முறையாக எதிர்கொள்ளக்கூடிய பொது தேர்வாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட மாணவர்களுடைய, அடுத்த கட்டம் எதை நோக்கி பயணிக்க இருக்கிறது, என்பது குறித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கிடைக்கும் பொதுத்தேர்வு மதிப்பின் அடிப்படையில், 11-ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்க முடியும் என்பதை முடிவு என்பதால், மிக முக்கிய தேர்வாக இது பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிலை என்ன ?

அந்தவகையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 183 பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். இதில் 77 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்கள் 7748 பேரும், மாணவிகள் 7,450 பேரும் என மொத்தம் 15 ஆயிரத்து 198 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் மாணவர்கள் 7207 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 7208 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 14,415 பேர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

காஞ்சிபுரத்திற்கு எந்த இடம் ?

காஞ்சிபுரம் மாவட்டம் படிப்பில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில் 87.55 % சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று 32வது இடத்தை பிடித்து மிக மோசமான நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதமாக 94.85 சதவீதம் உள்ளது. 

இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து, மாநில அளவில் 16 வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது. அரசு பள்ளியை பொருத்தவரை 100 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 32 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று சாதித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 93.36% தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுப்பள்ளிகளுக்கான தேர்ச்சி சதவீதத்தில் காஞ்சிபுரம் 15-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

கடந்த ஆண்டு காட்டிலும் காஞ்சிபுரம் இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி சதவீதம் பெற்று இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.