தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளைய தினம் (ஆகஸ்ட் 6) மூடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement


நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிவப்பு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாளையும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாணவர்களின் நலனை முன்னிட்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்து இருந்தார்.


வழக்கம்போல் இயங்கிய ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா

அதேபோல சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இன்று வானம் தெளிவாக இருந்ததால், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.


இந்த சூழலில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளைய தினம் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அதேபோல, திருப்பூர் சேலம், தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்ட் 7ஆம் தேதி, 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பபட்டுள்ளது.


மேலும் சில மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை


இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.