பள்ளிக்கல்வியின்முக்கியக்குறியீடுகளில்தமிழ்நாடுதொடர்ந்துமுன்னணியில்இருப்பதாக UDISE+ 2025–26 (Unified District Information System for Education Plus) அறிக்கைதெரிவித்துள்ளது.

Continues below advertisement

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட UDISE+ 2025–26 (Unified District Information System for Education Plus) அறிக்கையில், பள்ளிக் கல்வியின் பல்வேறு முக்கியக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்வி உள்கட்டமைப்பு

இடைநிற்றல், ஆசிரியர்- மாணவர்கள் விகிதம் ஆகியவற்றைத் தொடர்ந்து கல்வி உள்கட்டமைப்பின் பயன்பாட்டிலும் தமிழ்நாடு சிறப்பாகத் திகழ்கிறது. தேசிய அளவில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 169 மாணவர்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு பள்ளிக்கு 215 மாணவர்கள் உள்ளனர். இது பள்ளிக் கல்வி வளங்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படுவதையும், கல்வி நிறுவனங்கள் கல்வியியல் ரீதியாக வலுவாக செயல்படுவதையும் காட்டுகிறது.

Continues below advertisement

சமநிலையான அமைப்பு

மேலும், தமிழ்நாட்டில் பள்ளிகளின் கட்டமைப்பும் சமநிலையுடன் அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 59.05 சதவீதம்தொடக்கப்பள்ளிகள், 15.87 சதவீதம்நடுநிலைப்பள்ளிகள், 9.42 சதவீதம்உயர்நிலைப்பள்ளிகள்மற்றும் 15.66 சதவீதம்மேல்நிலைப்பள்ளிகள் ஆக உள்ளன. இந்த சமநிலையான அமைப்பு மாணவர்கள் இடையூறு இன்றி அடுத்தடுத்த கல்வி நிலைகளுக்கு முன்னேற உதவுகிறது.

தேசிய அளவில் முன்னோடி

UDISE+ 2025–26 அறிக்கை, பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பள்ளி இடை நிற்றல் குறைத்தல், மாணவர் சேர்க்கையை உயர்த்தல், போதுமான ஆசிரியர் எண்ணிக்கை உறுதி செய்தல், கல்வி உள்கட்டமைப்பை திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் பத்தாம் வகுப்பிற்குப் பிந்தைய பல்வேறு கல்வி வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் மாநிலம் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தரமான கல்வி, டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு, உள்ளடக்கிய கல்வி, தொழில்நுட்பத் திறன் மேம்பாடு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்ற கற்றல் சூழலை உருவாக்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு UDISE+ 2025- 26 அறிக்கை வலுவான அங்கீகாரமாக அமைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.