தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2025- 26ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு இன்று ( 06.10.2025) வெளியிடப்பட உள்ளது. இரண்டாவது நாளான நாளை (07.10.2025), 30.09.2025 நிலவரப்படி நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
மூன்றாம் நாளான அக்டோபர் 8ஆம் தேதி, மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25% ஒதுக்கீடு, பள்ளி (EMIS Login) உள்நுழைவில் காட்டப்படும். அடுத்த நாளான அக்.9 ( 09.10.2025) தகுதியுடைய மாணவர்களின் விவரங்கள் (ஆதார், பிறப்பு/ இருப்பிடம்/ வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ்) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
தொடர்ந்து அக்டோபர் 10 முதல் 13ஆம் தேதி வரை தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியாகும். இதில் விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
அக்.14 இறுதிப் பட்டியல்
தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி தகுதி பெற்ற மாணவர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அடுத்த நாள், தகுதியுடைய மாணவர்களை EMIS Portal-இல் உள்ளீடு செய்யும் பணி நடைபெறும்.
அக்டோபர் 16ஆம் தேதி, மொத்தம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 25% ஐ மீறினால், சிறப்பு முன்னுரிமைப் பிரிவுகளுக்குப் பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவிக்கப்படும். அடுத்ததாக அக்.17ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை EMIS Portal-இல் உள்ளீடு செய்யும் பணி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதுகுறித்து அறிந்துகொள்ள https://rteadmission.tnschools.gov.in/assets/data/RTE%20APPLICATION%20FORM_2024_25.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://rteadmission.tnschools.gov.in/moredetails என்ற இணைய முகவரியில் என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மேலும் அறிந்துகொள்ள:
உதவி எண்: 14417
rteadmission@tnschools.gov.in