தமிழக சிறைகளில் சிறைக் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகமாக உள்ளது.


இதுகுறித்து உள்துறை சிறைப் பிரிவு வெளியிட்டுள்ள அரசாணையில், ''சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல வீடியோ கால் ( காணொளி) தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மன அழுத்தத்தைக் குறைக்க புது முன்னெடுப்பு


சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவற்றின் தவறுகளை உணர்ந்து, மேலும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் சிறைவாசிகள் தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் பேசலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுகுறித்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.