முனைவர் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இனி ஒற்றைச் சாளர முறையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் வேறுபாடு
அதேபோல அவர் கூறும்போது, ‘’முனைவர் படிப்பிற்கு (PhD ) ஒற்றை சாளர முறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் இதைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்படும். தற்போதைய நடைமுறையில் இட ஒதுக்கீடு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் வேறுபாடு உள்ளது
சில பல்கலைக்கழகங்கள் ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றுகின்றன. இனி உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் முனைவர் படிப்பிற்கான சேர்க்கை, இணைய வழியில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் செயல்படுத்தப்படும்.
விரும்பிய இடத்தில் மாணவர்கள் சேரலாம்
விரும்பிய இடத்தில் மாணவர்கள் சேர உள்ள இடங்கள் குறித்த தகவல் வெளிப்படையாக அறிவிக்கப்படும்’’ என்றும் அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.