எம்பிபிஎஸ், பிடிஎஸ், இந்திய மருத்துவங்கள் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க, நாளை (ஜூன் 25) கடைசித் தேதி ஆகும்.
ஜூன் 6ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு
முன்னதாக தமிழ்நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 6ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களின் கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு முன்கூட்டியே விண்ணப்பப் பதிவை தொடங்கியது.
விண்ணப்பிப்பது எப்படி?
- ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது உள்நுழை எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, மீண்டும் விண்ணப்பித்தால் போதும்.
- தற்பொழுது உபயோகிக்கும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மட்டும் உரிய இடத்தில் பதிவுசெய்யவும்.
- பதிவு செய்தபின், விண்ணப்பதாரர்கள்தங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மாற்ற முடியாது என்பதால், கவனமாக தகவல்களை உள்ளிட வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
- இறுதியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த (Final Submission) பின் அந்த விண்ணப்பத்தினை மாற்ற இயலாது.
- விண்ணப்பக்கட்டணத்தை செலுத்திய பிறகு அவர்களுக்கு விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு தரப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- இந்தியராக இருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், நேட்டிவிட்டி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவத்தின் கட்டணம் 500 ரூபாய் ஆகும். எனினும் எஸ்சி/ எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் எதுவும் செலுத்தப்பட வேண்டியதில்லை.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர https://tnmedicalselection.net/news/06062025002732.pdf என்ற அறிவிக்கையை வாசித்தபிறகு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள்: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046
கூடுதல் விவரங்களை https://tnmedicalselection.net/ அல்லது www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து அறியலாம்.