அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான தகுதி, வயது வரம்பு, கட்டணம் என்ன? இதோ முழு விவரம்

Continues below advertisement

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 17) தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை இந்தத் தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இதில் ஆங்கிலப் பாடத்துக்கு, 406 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழ் பாடத்துக்கு 309 காலி இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 61 பாடங்களுக்கு ஆசிரியர் காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Continues below advertisement

வயது வரம்பு

ஜூலை 1, 2025-ன்படி, 57 வயது நிறைவடைந்து இருக்கக் கூடாது.

என்ன தகுதி?

தேவையான பாடத்தில் முதுகலைப் பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

கற்பித்தல் அனுபவம் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

ஊதியம் எவ்வளவு?

ரூ.57,700 – ரூ.1,82,400 (Level 10)

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப் பிரிவினர்- ரூ.600

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் – ரூ.300

4 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இதற்கெனத் தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IjE2RmxadEs0RDVpZzkzWk1qNmNhWEE9PSIsInZhbHVlIjoiOTdLL3V2VXllQVVsSGF6UVJSNHl1Zz09IiwibWFjIjoiNmQzN2NiNjdlZDZlMDU3MGFlMDFmOTIxYzA5NDdjYTYwZTg4MTEyYzU2MWZlOGQyZWMwMDQ3MGM0YTQ5YjE0MSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

இ மெயில் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

சப்மிட் பொத்தானை அழுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://trb.tn.gov.in/admin/pdf/8098279381AP_compressed.pdf என்ற இணைப்பில் உள்ள அறிவிக்கையைக் காண வேண்டும்.

தமிழகத்தில் 163 அரசு நேரடி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த நிலையில் சுமார் 4 ஆயிரம் இடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியாகி, ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி எண்: 1800 425 6753 (10:00 am – 05:45 pm)

இ மெயில் முகவரி: trbgrievances[at]tn[dot]gov[dot]in