மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வு, (ஜூன்‌, ஜூலை 2024) தனித்தேர்வர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி வெளியான நிலையில், பொதுத் தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 5.44 சதவீத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. 


இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


’’நடைபெறவுள்ள ஜூன்‌/ஜூலை 2024, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்‌ தேர்வெழுத விண்ணப்பித்தத்‌ தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 19.06.2024 (புதன்கிழமை) அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.


ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?


தனித்தேர்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்‌ தோன்றும்‌ "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/ JULY 2024 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப்‌ பதிவெண்‌ (Permanent Register No.) மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ (Date of Birth‌) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


செய்முறைத்‌ தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத்‌ தனித்தேர்வர்கள்‌ தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்‌. உரிய தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.


தேர்வுக்கால அட்டவணை


ஜூன்‌/ ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்‌’’.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


தேர்வுத் தேதிகள் என்னென்ன?



கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in