மாநிலம் முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 26) வெளியாக உள்ளன. இந்தத் தகவலை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் தெரிவித்துள்ளார்.


மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி வெளியான நிலையில், பொதுத் தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 5.44 சதவீத மாணவர்களுக்கும் துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. 


இந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து நாளை தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.


10ஆம் வகுப்புத் துணைத் தேர்வு


தனித்தேர்வர்களும்‌ கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும்‌ 10ஆம் வகுப்புத் துணைத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வுகள் ஜூலை 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றன.


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் தெரிவித்துள்ளார். அதேபோல 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாகின்றன.




காண்பது எப்படி?



  • தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • அதில், RESULT என்ற வாசகத்தை க்ளிக் செய்யவும்.

  • அதில், Supplementary Exam, Jun / Jul 2024 - Result - Statement Of Marks Download க்ளிக் செய்யவும்.

  • அதில், தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, துணைத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

  • கூடுதல் தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌.


விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை


ஜூன்‌ / ஜூலை 2024, மேல்நிலை துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்களுக்கான வழிமுறைகள்‌




குறிப்பு:


விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ தேர்வர்கள்‌ மட்டுமே பின்னர்‌ மறு கூட்டல்‌ / மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்‌.


மறு கூட்டல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ மேல்நிலைத்‌ தேர்வர்கள்‌ பின்னர்‌ மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/