TN Class 12 Result LIVE: பொறியியல் படிப்புக்கு ஜூலை 26 - ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்

ABP NADU Last Updated: 19 Jul 2021 01:19 PM
தேர்ச்சிப் பெற்றவர்கள் 100%

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை : 3,80,500
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை : 4,35,973,


பொதுப்பாடப்பிரிவில்  7,64,593 பேர் தேர்ச்சி,  தொழிற்பாடப்பிரிவில் 51,880 பேர் தேர்ச்சி 


 


பொறியியல் படிப்புக்கு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புக்கு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் 14277 மாணவர்கள் தேர்ச்சி

தேனி மாவட்டத்தில் மாணவர்கள் 6974 பேரும் மாணவியர்கள் 7303 பேரும் என மொத்தம் 14277 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

12ம் வகுப்பு மதிப்பெண்கள் தசம (decimal System) அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்கையில் குழப்பைத்தை தவிர்க்க 12ம் வகுப்பு மதிப்பெண்கள் தசம (decimal System) அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.   

விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாற நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது.  


மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று  உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முன்னதாக  அறிவுறுத்தியிருந்தது. 

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியானது. மாணவர்கள், தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். 

ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு வரும்  செப்டம்பர் 12ம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.  ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு கடைசி தேதி 2021 ஆகஸ்ட் 6 ஆகும்.     


 

கல்லூரி திறப்பு எப்போது - யுஜிசி முக்கிய அறிவிப்பு

12-ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில வாரியத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று  உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட  வேண்டும் என கல்லூரிகள் /கல்வி நிலையங்களை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காலியிடங்களை நிரப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். ஆனால், அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கும் செயல்முறை 2021 டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நடைபெறாலம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கட்டயாம்  அக்டோபர் 1 அல்லது அதற்கு முன்னதாக தொடங்கப்பட வேண்டும்.

கடந்தாண்டு 12ம் வகுப்பு வாரியத் தேர்வு தேர்ச்சி விகிதம் 92.3%

தமிழகத்தில் கடந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிக்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவலால் பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இதனால், வணிகவியல் வேதியியல், உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவில்லை. எனவே, தேர்வு நடைபெறாத பாடங்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் மற்றும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.  ஆனால், இந்தாண்டு கொரோனா இரண்டாவது அலை காரணமாக 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  


 

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் மூலம் மதிப்பெண் கணக்கிடப்படும்

12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.    


 

12ம் வகுப்பு பொதுத் தேர்வு: மதிப்பெண் கணக்கீடு முறை

12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வுக்கான மதிப்பெண் கணக்கீடு முறையை தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்தது.


அதன்படி,


10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50% ,  11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (Written) மதிப்பெண் மட்டும்)  20% , 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு (Practical) / அக மதிப்பீடு (Internal) - 30% என்ற முறையில் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.  


 


 

மதிப்பெண் பட்டியல்

மாணவர்கள் 22ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

இன்னும் சற்று நேரத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.

Background

இன்று 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையளங்களில் அறியலாம். 


தமிழ்நாட்டில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது (50:20:30). மேலும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் 30:30:40 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பு வழங்கப்பட உள்ளது. 


மதிப்பெண் பட்டியலை வரும் 22ஆம் தேதி http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.