12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் தேதியைப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி 7845252525 என்ற எண்ணிற்கு Hi அனுப்பி துறை மற்றும் வகுப்பு விவரங்களை வழங்கி, பின்னர் பதிவு எண், பிறந்த தேதியை கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது.
2026ம் ஆண்டு பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தேர்ச்சி விகிதம் 95.20% அமைந்துள்ளது. மாணவர்க 93.19% பேரும், மாணவிகள் 97% தேர்ச்சி பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று நிலையில் இந்த தேர்வை 7,874 பேர் எழுதவில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 0.17% தேர்ச்சி சதவிகிதம் கூடுதல் பெற்றுள்ளது.
தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றிருக்கிறது. இரண்டாம் இடத்தில் சிவகங்கை, மூன்றாம் இடம் கன்னியாகுமரி, 4ம் இடம் திருநெல்வேலி, 5ம் இடம் திருச்சிக்கு கிடைத்துள்ளது.
இதனிடையே கல்லூரி உள்ளிட்ட உயர்நிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெற மே 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 11,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
