தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியின் ஒரு பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஒரு உண்டு உறைவிடப்பள்ளியும் என மொத்தம் 259 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 522 மாணவர்களும், 17 ஆயிரத்து 599 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 121 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். மேலும் கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், +2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு (2019-20) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.31%, மாணவிகள் 98.24% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்