Tamil Nadu 12th Exam News Live: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? இன்று முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக இருக்கின்றன. இது தொடர்பான, அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலம்.

ABP NADU Last Updated: 04 Jun 2021 02:40 PM
அசாம், பஞ்சாப், தமிழ்நாடு - 12ம் வகுப்பு தேர்வு அறிவிப்பை வெளியிடவில்லை

இந்தியாவில், அசாம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மட்டுமே 12ம் வகுப்புத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன.   

12ம் வகுப்பு பொதுத் தேர்வு - ஓடிசா முதல்வர் அறிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு 12ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.    

தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வலியுறித்தியுள்ளார்.   

12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - யோகி ஆதித்தியநாத் அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக உத்தர பிரதேச மாநில அரசு நேற்று அறிவித்தது. அம்மாநிலத்தில், 56 லட்சம்  மாணவர்கள் மாநில வாரியத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.         

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வை ரத்து செய்வதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்தது

12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் - பெரும்பாலான பெற்றோர்கள் கோரிக்கை

மாநிலத்தின் பெரும்பாலான பெற்றோர்களும், கல்வியாளர்களும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கருத்து தெரிவிக்க மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் tnschoolsedu21@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


 

1 முதல் 11 வகுப்பு வரை ஆல் பாஸ்

தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி முன்னதாக அறிவித்தார். மேலும்,  இந்தாண்டு,  9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10,11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.    

தேர்வை நடத்துவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

12ம் வகுப்புத் தேர்வு இறுதி : முக்கிய அறிவுப்பு இன்று வெளியாகிகிறது

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு வாரியத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக இருக்கின்றனர். சுமார், 8 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அறிவிப்பாக இது கருதப்படுகிறது.  முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை தொகுக்கும் நடவடிக்கை சிபிஎஸ்இ மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.      

Background

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். 


முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.