தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெறும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று பிற்பகலில் வெளியிடுகிறது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.

Continues below advertisement

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Continues below advertisement

இன்று பிற்பகல் முதல்

நடைபெற உள்ள மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை (Hall Tickets) இன்று முதல் பெறலாம். குறிப்பாக மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாமாண்டிற்கு 23.02.2026 அன்று பிற்பகல் முதல் பெறலாம்.

பெறுவது எப்படி?

குறிப்பாக dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் பெறுவது எப்படி?

அதே நேரத்தில் மாணவர்கள் நேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் கையொப்பம் இட்ட அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். அதில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா என்றும் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.