TN 10th Result 2023 LIVE: தேர்வில் தேர்ச்சி இல்லையா..? கவலை வேண்டாம்..! மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Tamil Nadu 10th Result 2023 LIVE Updates: தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

முகேஷ் Last Updated: 19 May 2023 12:05 PM

Background

Tamil Nadu 10th Result 2023 LIVE தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள்...More

TN 10th Result 2023 LIVE: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,029 பேர் தேர்ச்சி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் 22,001 மாணவ, மாணவியர் எழுதினர். இந்நிலையில், தோ்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 21,029 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 10033 பேர் (93.31%), மாணவியர் 10,996 பேர் (97.75%) தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.58 சதவீதம் ஆகும்.  மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம், 5வது இடம் பிடித்துள்ளது.