தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலையில் வெளியிட்டார். தற்போது இணையதளங்களில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விவரம் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in  என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.


நடப்பாண்டில் 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர். மாணவிகள் மொத்தம் 4 லட்சத்த 60 ஆயிரத்து 120 ஆகும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.


10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.




10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை  12 ஆயிரத்து 714 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 456 ஆகும். உயர்நிலைப்பள்ளிகள் 5 ஆயிரத்து 258 ஆகும். இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 6 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 886 ஆகும்.






 






தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாவணர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 16 ஆகும். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 ஆயிரத்து 424 ஆகும். அதாவது 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் 242 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 519 நபர்கள் ஆவர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண