தமிழ்நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் நாளை (ஜூன் 20) வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை உடனே தெரிந்துகொள்வது எப்படி என்று பார்க்கலாம்.


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. தனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 


10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதன்படி, ஜூன் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.




தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


மாணவர்கள் முதலில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.


http://tnresults.nic.in/
http://dge.tn.gov.in 
http://dge1.tn.gov.in
http://dge2.tn.gov.in 


அதேபோல மாணவர்கள் நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


**


இதையும் வாசிக்கலாம்: TN 10th Result 2022: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்படி?- முழு விவரம்


TN 12th Result 2022: புதிய தேதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தெரிந்துகொள்வது எப்படி?- முழு விவரம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண