பத்தாம் வகுப்பு ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நீங்கள் அறிந்து கொள்ளும் விதமாக ABP நாடு இணையதளம் , அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. கீழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்து, நீங்கள் பத்தாம் வகுப்பு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கீழே தரப்பட்டுள்ள நான்கு ‛லிங்’ மூலம் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை அறியலாம்.கீழே தரப்பட்டுள்ள இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து முடிவை தெரிந்து கொள்ளலாம்.
ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 1
ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 2
ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 3
ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 4
2 ஆண்டுகளுக்குப் பின் உண்மையான பொதுத்தேர்வு
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. தனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது.
10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு படி, ஜூன் 20ஆம் தேதியான இன்று, பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
பொதுத்தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், கடைகோடி வரை உள்ள மாணவர்களும், தங்கள் தேர்ச்சி தகவலை அறிந்து கொள்ள சம்மந்தப்பட்ட இணையத்தின் லிங்குளை ஒருங்கிணைத்து ஏபிபி நாடு உங்களுக்கு வழங்கியுள்ளது.