இந்தியாவின் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிட்ஸ் பிலானி (BITS Pilani), 2026-27 கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

Continues below advertisement

இதன்படி, அக்கல்வி நிறுவனம் நடத்தும் பிட்சாட் (BITSAT) நுழைவுத் தேர்வில் முதல் 500 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீத கல்விக் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திட்டத்தின்முக்கியஅம்சங்கள்

பிட்ஸ் பிலானியின் இந்த புதிய சேர்க்கைக் கொள்கையின்படி, பிட்சாட் நுழைவுத் தேர்வில் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் வரும் மாணவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் முழுமையான கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்தச் சலுகையைப் பெற மாணவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.

Continues below advertisement

பொருளாதாரச் சூழல் காரணமாகத் திறமையான மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போகக்கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த உதவித்தொகையானது மாணவர் சேர்க்கைக்கான Admission Offer உடனேயே வழங்கப்படும் என்பதால், மாணவர்கள் இதற்கெனத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

விதிமுறைகள்மற்றும்நிபந்தனைகள்

இந்த முழுமையான கட்டணச் சலுகையானது நான்கு ஆண்டுகளுக்கும் தொடர வேண்டுமானால், மாணவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பில் தொடர்ந்து 7.5 சி.ஜி.பி.ஏ திப்பெண்ணைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். பிலானி, கோவா, ஹைதராபாத் என பிட்ஸ் பிலானியின் அனைத்து வளாகங்களிலும் இந்தத் திட்டம் செல்லுபடியாகும்.

இதுகுறித்து பிட்ஸ் பிலானி குழுமத்தின் துணைவேந்தர் ராமகோபால் ராவ் கூறுகையில், "திறமை இருந்தாலும் பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. பல ஆண்டுகளாக நாங்கள் உதவித் தொகைகளை வழங்கி வந்தாலும், இந்தத் திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிட்சாட் 2026 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.bits-pilani.ac.in/

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க https://cdn3.digialm.com/EForms/configuredHtml/1823/94103/Index.html?_gl=1*1967jd6*_gcl_au*MTU4NzIwMjAxMi4xNzYzNTUwMzc2LjE1OTU1NDE4MjIuMTc2NTQyNzE5OS4xNzY1NDI4MzY4&utm_source=null&utm_medium=null&utm_campaign=null என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.