Continues below advertisement

தஞ்சாவூர்: மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC,MBC/DNC) இன மாணவ, மாணவிகள் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM. IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் (Cental Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC,MBC/DNC) வகுப்பை சார்ந்த, மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம். சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2025-26 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல்  விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் 1660 இயக்ககம், சென்னை-5 அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அணுகியோ அல்லது என்ற https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள். இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவராகிறார்.

மேலும், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் (with Bonafide Certificate) தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருக்கும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இனத்தவருக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையருக்கும் பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 30.09.2025-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம். 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 தொலைபேசி எண் 044-29515942 மின்னஞ்சல் ( tngovtiitscholarship@gmail.com

விண்ணப்பங்கள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 தொலைபேசி எண் 9445477817 1 ( mbcdnciitscholarship@gmail.com) . இத்தகவலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.