3 இலட்சத்து 94 ஆயிரம்என்ற அளவில் அரசுப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள்
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையிலானதிராவிடமாடல்அரசுசெயல்படுத்தும்கல்விமேம்பாட்டுத்திட்டங்களின்பலனாகநேற்றுவரையிலும்அரசுத்தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள்புதிதாகசேர்ந்துள்ளார்கள்என்பதைபெரும்மகிழ்ச்சியுடன்தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரும்வருக! கல்வியின்வழியேஅறிவுலகைஆள்க’’என்றுஅமைச்சர்அன்பில்பெருமிதத்துடன்தெரிவித்துள்ளார்.
எனினும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக, முழுமையாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குறைவான வேகத்திலேயே மாணவர் சேர்க்கை
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான வேகத்திலேயே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தற்போது சுமார் 4 லட்சம் பேர் இதுவரை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கற்பித்தல்பணிகளில்கடுமையானபற்றாக்குறை
இதற்கிடையே நெட்டிசன் ஒருவர் அமைச்சர் அன்பிலின் எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிலில், ‘’சுமார் 4 லட்சம்புதியமாணவர்களுக்குபயிற்சியளிக்கஅரசுப்பள்ளிகளில்போதுமானஆசிரியர்கள்இருக்கின்றனரா? கற்பித்தல்பணிகளில்கடுமையானபற்றாக்குறைநிலவுகிறதே. அரசுஇதற்குமுக்கியத்துவம்கொடுத்துகவனிக்கவேண்டும்’’என்று பதிவிட்டு உள்ளார்.
