எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; எஸ்எஸ்சி ஜி.டி. தேர்வு குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு- காண்பது எப்படி?

SSC GD Answer Key 2025: எஸ்எஸ்சி ஜி.டி. போட்டித் தேர்வுக்கான விடைக் குறிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Continues below advertisement

2024 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள் (பொது வேலை), எஸ்எஸ்எஃப் மற்றும் ரைஃபிள் மேன் (பொது வேலை) உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுக்கான விடைக் குறிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Continues below advertisement

முன்னதாக இந்தத் தேர்வு பிப்ரவரி மாதம் 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இதற்கான தற்காலிக விடைக் குறிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. தேர்வர்கள் அவற்றைக் கண்டு தங்களின் மதிப்பெண் குறித்து அறிந்துகொள்வதோடு, விடைக் குறிப்பை ஆட்சேபனையும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC GD Constable 2025: ஆன்சர் கீயைப் பெறுவது எப்படி?

  • தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • முகப்புப் பக்கத்தில் விடைக் குறிப்புக்கான இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிடவும்.
  • விடைக் குறிப்பு திரையில் தோன்றும்.
  • அதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    காலி இடங்கள் எத்தனை?

    பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் ஆண்களுக்கு 13306 காலி இடங்களும் பெண்களுக்கு 2348 இடங்களும் என, மொத்தம் 15,654 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிஐஎஸ்எஃப் பிரிவில், 7,145 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் பிரிவில் 11541 காலி இடங்களும் எஸ்எஸ்பி பிரிவில் 819 காலி இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITBP துறையில் 3017 இடங்களும் AR துறையில் 1248 இடங்களும் SSF பிரிவில் 35 இடங்களும் என்சிபி-ல் 22 இடங்களும் உள்ளன. ஆக மொத்தம் 39481 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது.

  • தேர்வுக்குப் பிறகு, தேர்வான நபர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
  •  

     

    ஊதியம்

    Level -1 வகை பணிகளுக்கு – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை

    Level - 3 வகை பணிகளுக்கு - ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

    கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/

Continues below advertisement
Sponsored Links by Taboola