எஸ்எஸ்சி எனப்படும் அதிகாரிகள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (சிஜிஎல்) இறுதித் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ஜூனியர் ஸ்டாடிஸ்டிகல் ஆபீசர் (JSO), பல்வேறு இடங்களில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer), பல்வேறு உதவியாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்கள், இந்தத் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.

மத்திய அமைச்சகத்தின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், முகமைகளில் காலியாக உள்ள குரூப் பி, குரூப் சி பணிகளுக்கான 17,227 காலி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடந்தது.

தேர்வு நடந்தது எப்போது?

நாடு முழுவதும் செப்.9 முதல் 24ஆம் தேதி வரை முதல்கட்டத் தேர்வு (டயர் 1) நடைபெற்றது. இவர்களின் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகின. தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்வு (டயர் 2) ஜனவரி 18, 19, 20 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. 

தேர்வர்கள் https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/CGLE%20-24%20Final%20Result%20Writeup_12325.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகள் பற்றி அறியலாம்.

கட் ஆஃப் எவ்வளவு?

இந்தத் தேர்வில் எஸ்சி தேர்வர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் 285.45888 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்டி தேர்வர்களுக்கு 266.49513 ஆகவும் OBC தேர்வர்களுக்கு 306.27841 ஆகவும் கட் ஆஃப் மதிப்பெண்கள் உள்ளன.

அதேபோல பொருளாதாரத்தில் பின் தங்கிய தேர்வர்களுக்கு (EWS) 300.03797 ஆகவும் ஒதுக்கீட்டுக்குள் வராத தேர்வர்களுக்கு 322.77352 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிற பிரிவுகளுக்கு எப்படி?

ESM - 202.28472

OH - 258.66022

HH - 181.89266

VH - 219.45053

 Pwd- Other - 136.73346 686

அதேபோல Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) பணியிடங்களை நடத்த நிரப்பப்பட்ட தேர்வு முடிவுகளையும் எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.