எளிய அறிவியல் சோதனைகள் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு  தேவகோட்டை.

Continues below advertisement

மாணவர்களுக்கான  அறிவியல் செயன்முறை விளக்க நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான  அறிவியல் செயன்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவி ஹாசினி வரவேற்புரை வழங்கினார்.

Continues below advertisement

எளிய அறிவியல் சோதனைகளை நேரடியாக செய்து காண்பித்தனர்.

 பயிற்சியாளர்கள் அரங்குளவன் மற்றும் தனசேகரன் ஆகியோர் பல்வேறு அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தி எளிய அறிவியல் சோதனைகளை நேரடியாக செய்து காண்பித்தனர். அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பயன்பாடு, மின்கடத்தும் மற்றும் மின்கடத்தாப் பொருட்கள், நம்மைச் சுற்றி நிகழும் இயற்கை மாற்றங்கள், அறிவியல் கோட்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களுடன் மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தனர்.  

அறிவியலை செயல்முறை வழியில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கங்களைப் பெற்றனர். இதன் மூலம் அறிவியலை செயல்முறை வழியில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.மு.மு. அறக்கட்டளையினர் செய்திருந்தனர். நிறைவாக மாணவி நந்தனா நன்றியுரை வழங்கினார்.