12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. 1 ஆம் தேதி தொடங்கும் தேர்வு 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  அதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5 ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 11 ஆம் தேதி, வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 15 ஆம் தேதி, கணினி, இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்விகள் நடைபெறுகிறது.


கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உள்ளிட்ட பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன. 


பொதுத் தேர்வு தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்று முதல் ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக, "online portal" என்ற வாசகத்தினை 'click' செய்து "HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024" என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள user id, password பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும்‌ சோத்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும்‌ வழங்கப்படும்‌மார்ச்‌ - 2024, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்‌,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.