வெளிநாட்டில் படிக்க ஆசையா.?

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  மாணவர்கள் உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ,  மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 

Continues below advertisement

தகுதி என்ன.?

இத்திட்டத்தின் முதுகலைப்படிப்பு கீழ் பயில 2026-2027 உள்ள ஆண்டில் வெளிநாட்டில் சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ மற்றும் மாணவியர்கள் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் (Unconditional offer letter) பெற்றிருக்க வேண்டும். 

பெற்றோரின் ஆண்டு வருமானம்

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities) சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல்வேண்டும்.

Continues below advertisement

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி- கடைசி தேதி என்ன.?

விண்ணப்பிக்க இத்திட்டத்தில் www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர். சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பராம்பரிய கட்டடம், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை 600 005. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15.10.2026. என தெரிவிக்கப்பட்டுள்ளது.