Railway Group D Exam 2026 Free Coaching: ரயில்வே தேர்வு வாரியத்தில் குரூப் D பதவிகளுக்கான தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (19.02.2026) முதல் தொடங்கப்பட உள்ளன. இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ரயில்வே தேர்வு வாரியத்தால் 22,195 GROUP D காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 02.03.2026 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு/ ITI / இணையான கல்வித் தகுதி. வயது வரம்பு 18 - 33 ஆகும்.

அதே நேரத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்படும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Continues below advertisement

நாளை முதல் இலவச வகுப்புகள்

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை பின்வரும் கூகுள் படிவத்தில் நிரப்புமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள். https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7

மேலும் RRB, TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் studyhall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

மேலும் விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மற்றும் அருகமை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.