புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி.எஸ். (MDS - Master of Dental Surgery) எனப்படும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கோன ஆன்லைன் விண்ணப்பங்களை சென்டாக் (CENTAC) நிர்வாகம் வரவேற்றுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் வரும் ஜூலை 10ஆம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி.எஸ். (MDS) எனப்படும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் வரும் 10ஆம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் (CENTAC) நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Continues below advertisement

தனித்தனியே விண்ணப்பம்:

முதுநிலை பல் மருத்துவ இடங்களில் உள்ள புதுச்சேரி அரசு ஒதுக்கீடு (Government Quota), அகில இந்திய மேலாண்மை ஒதுக்கீடு (All India Management Quota) மற்றும் என்.ஆர்.ஐ. (NRI) இடங்களுக்குச் சேர விரும்பும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டண விவரம்:

பல்வேறு பிரிவினருக்கான கட்டண விவரங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  • புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்சி., எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு: ரூ. 1,500
  • புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் இதர பிரிவினருக்கு: ரூ. 3,000
  • மேலாண்மை (நிர்வாக) ஒதுக்கீட்டு இடங்களுக்கு: ரூ. 5,000
  • என்.ஆர்.ஐ. (NRI) மற்றும் என்.ஆர்.ஐ. ஸ்பான்ஸர்டு இடங்களுக்கு: ரூ. 10,000

முக்கிய நிபந்தனை:

ஒரு விண்ணப்பதாரர் முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கு ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு, அவர் கலந்தாய்வு செயல்முறையிலிருந்து முற்றிலும் நீக்கப்படுவார்.

கல்லூரி வாரியான இடங்கள் நிலவரம்:

தற்போதைய நிலவரப்படி மொத்தம் 63 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் விவரம்:

  • மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி: சென்டாக் அரசு ஒதுக்கீடு - 9 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடு - 10 இடங்கள் என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
  • வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி (தனியார்): சென்டாக் அரசு ஒதுக்கீடு - 23 இடங்கள்.
  • மாகி பல் மருத்துவக் கல்லூரி (தனியார்): சென்டாக் அரசு ஒதுக்கீடு - 21 இடங்கள்.

ஒட்டுமொத்தமாகச் சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் 53 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 இடங்களும் உள்ளன. எனினும், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.டி.எஸ். இடங்கள் கிடைக்கப் பெற உள்ளதால், அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உதவி எண்கள்:

விண்ணப்பப் பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் தங்களது லாகின் டேஷ்போர்டில் உள்ள ‘கிரீவன்ஸ்’ (Grievance) பகுதி மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். அல்லது 0413-2655570, 0413-2655571 ஆகிய ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.