தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை:
தைப்பொங்கல் என்பது வெறும் விடுமுறையோ அல்லது சர்க்கரைப் பொங்கல் தினமோ மட்டுமல்ல, அது நம் வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான அடையாளம். இயற்கையையும் உழவையும் அறுவடையையும் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த தினத்தில்தான் தை 1ஆம் தேதி வருகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்த தினமான ஜனவரி 17 அன்று காணும் பொங்கலும் உழவர் தினமும் கொண்டாடப்படுகிறது. இந்த தினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு:
ஜனவரி 14ஆம் தேதி பழையன கழிக்கும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளிலும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. அவ்வாறு விடுமுறை அளித்தால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதனை கருத்தில் கொண்ட அரசு ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது
விடுமுறை கால அட்டவணை:
இந்த அறிவிப்பின்படி, விடுமுறை நாட்கள் பின்வருமாறு அமையும்:
| தேதி | விவரம் |
| ஜனவரி 14 (புதன்) | பொங்கல் விடுமுறை ஆரம்பம் (போகிப் பண்டிகை) |
| ஜனவரி 15 (வியாழன்) | தைப்பொங்கல் |
| ஜனவரி 16 (வெள்ளி) | மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம் |
| ஜனவரி 17 (சனி) | காணும் பொங்கல் |
| ஜனவரி 18 (ஞாயிறு) | வாராந்திர விடுமுறை |
இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.ஜனவரி 19-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் இயங்கும்.
ஜனவரி மாதம் பொதுவாக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாகவே அமைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளிலேயே புத்தாண்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்துக்கு ஜனவரி 26ஆம் தேதி தேசிய விடுமுறை அளிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. இதனால் ஜனவரி மாதம் என்றாலே ஜாலிதான் என்று மாணவர்கள் குஷியாகக் கூறி வருகின்றனர்.