கல்வி உதவித்தொகை திட்டம்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய, மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், இலவச புத்தகம், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட [ம] சீர்மரபினர் மாணவ,மாணவியருக்கு 2026-27ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் (PM-YASASVI Post matric Scholarship Scheme) கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறைமூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?

1.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.மமாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Continues below advertisement

II. பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு). முதுகலை (ம) ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2) விண்ணப்பிக்கும் முறை: 2026-27-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள். University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது.

3) தகுதியுள்ள மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி (Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 18.09.2026 முதல் 21.10.2026 வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

4) சென்னை மாவட்டத்தில் கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.