பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர் கண்ணன் என்பவர் வார்னிஷ் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தீவிரமடையும் ஆசிரியர் போராட்டம்
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
எனினும் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்கு அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. அதேபோல பகுதி நேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக அரசுநடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்கடந்த 2012-ஆம்ஆண்டில்பகுதிநேரஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாகஉடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக் கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்விஆகியகல்வி இணைச்செயல்பாடுபாடங்களைகற்பிக்க 16 ஆயிரத்து 549 பேர்அப்போது 5 ஆயிரம்ரூபாய்தொகுப்பூதியத்தில்தற்காலிகமாகநியமிக்கப்பட்டார்கள்.
14 ஆண்டாக பணி நிரந்தரம் இல்லை
இதைத் தொடர்ந்து 15ஆவதுகல்வி ஆண்டாகியும் பகுதிநேரஆசிரியர்கள்இதுவரைபணிநிரந்தரம்செய்யப்படவில்லை. இடைப்பட்டஇந்தகாலங்களில்படிப்படியாகசம்பளஉயர்வுமட்டுமே 7,500 ரூபாய்வரைவழங்கிதற்போது 12,500 ரூபாயாகவழங்கப்படுகிறது. இது இன்றைய காலகட்டத்தில் சிறிதளவு கூடப் போதுமானதாக இருப்பதில்லை. இதில்மரணம், பணிஓய்வு, ராஜினாமாஉள்ளிட்டகாரணங்களால்தற்போதுவரைசுமார் 5 ஆயிரம்பேர்பணியிடங்கள்காலியாகிவிட்டன.
இதனால்தற்போதுசுமார் 12 ஆயிரம்பகுதிநேரஆசிரியர்கள்மட்டுமே பணிசெய்கின்றார்கள். இவர்களுக்குப் பணி நிரந்தரம் கொடுப்பது மிகவும் சவாலான காரியமில்லை என்று ஆசிரியர்கள் குரல் எழுப்புகின்றனர்.
ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு முயற்சி
இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெரம்பலூர்மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேரஉடற்கல்விஆசிரியர்கண்ணன், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தொடர்ந்துஆறுநாட்களாகபோராட்டகளத்தில்உள்ள ஆசிரியர் கண்ணன்,மிகுந்தமனஉளைச்சல்காரணமாகஇந்தமுடிவைதிடீரென்றுஎடுத்திருக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகிவானகரத்தில்உள்ளமண்டபத்தில்அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன்,வார்னிஷ்குடித்துதற்கொலைக்குமுயன்றுள்ளார். வாந்திஎடுத்துமயக்கம்அடைந்துள்ளார். தற்போது ஆபத்தானநிலையில்உள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
