10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில், மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் வருடாந்திர நிகழ்வான பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) மீண்டும் வந்துவிட்டது.

Continues below advertisement

2026-ஆம் ஆண்டிற்கான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். முதல்முறையாக தமிழ்நாட்டிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எங்கெங்கே?

வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, இம்முறை பரந்துபட்ட அளவில் நடைபெற உள்ளது. முதல்முறையாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், குஜராத்தின் தேவ்மோக்ரா, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், அஸ்ஸாமின் கவுகாத்தி மற்றும் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லம் (7, லோக் கல்யாண் மார்க்) ஆகிய ஐந்து இடங்களில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

Continues below advertisement

பிரதமர் மோடி அறிவுரை

இந்நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்த பிரதமர் மோடி, "தேர்வுகள் நெருங்குவதால் பரிக்ஷா பே சர்ச்சாவும் வந்துவிட்டது. எனது இளைய நண்பர்களுடன் மன அழுத்தம் இல்லாத தேர்வுகள் மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதிப்பது எப்போதும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

எல்லோருக்கும் எல்லாம் தெரியாது, ஆனால் எல்லோருக்கும் ஏதோ ஒன்று தெரியும். எனவே உங்கள் படிக்கும் முறையை நம்புங்கள். தேர்வுக்கு எழுதிப் பார்ப்பது அவசியம், நீங்கள் எதைப் படித்தாலும் அது மனதில் பதிய எழுதுவது உதவும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சாதனை படைத்த முன்பதிவு

மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டிற்கான முன்பதிவு, வரலாற்று மைல் கல்லை எட்டியுள்ளது. இதற்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 2.85 கோடி மாணவர்கள், 17 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 3.49 லட்சம் பெற்றோர்கள் அடங்குவர்.

எங்கேபார்க்கலாம்?

பிப்ரவரி 6ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் டிடி நியூஸ் தொலைக்காட்சியில் பொதுமக்கள் நேரலையாகக் காணலாம்.

 

இந்தஆண்டின்கருப்பொருள்கள்

  1. தேர்வுகளைக் கொண்டாடுவோம் 
  2. சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு
  3. சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்
  4. தூய்மை இந்தியா

தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.