Pariksha Pe Charcha 2025: பிரதமர் மோடியுடன் இணையும் தீபிகா படுகோன், சத்குரு; எங்கு? எதற்கு?

பிரதமர் மோடியின் பல்துறை வல்லுநர்களும் பிரபலங்களும் இணைந்து மாணவர்களைச் சந்தித்துப் பேச உள்ளனர். குறிப்பாக, தீபிகா படுகோன், சத்குரு ஆகியோர் இணைந்துள்ளனர்.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடி, பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டுகிறது. 2025ஆம் ஆண்டில், 8ஆவது முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Continues below advertisement

பரிக்‌ஷா பே சார்ச்சா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடியின் பல்துறை வல்லுநர்களும் பிரபலங்களும் இணைந்து மாணவர்களைச் சந்தித்துப் பேச உள்ளனர்.

விருந்தினர்களின் பட்டியல்

சத்குரு

தீபிகா படுகோன்

மேரி கோம்

அவனி லேகரா

ருஜுதா திவேகர்

சோனாலி சபர்வால்

ஃபுட்ஃபார்மர் (ரேவன்ட் ஹிமத்சிங்கா)

விக்ராந்த் மாஸ்ஸி

பூமி பெட்னேகர்

டெக்னிக்கல் குருஜி (கௌரவ் சவுத்ரி)

ராதிகா குப்தா

3.30 கோடி விண்ணப்பப் பதிவு

2025ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 14ஆம் தேதியோடு முடிவடைந்தது. டிசம்பர் 14ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இந்த ஆண்டு சுமார் 3.30 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களைக் கையாளவும் பிரதமர் மோடி 7 ஆண்டுகளாக ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுத் தேர்வுகள், தேர்வு அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைனில் https://innovateindia1.mygov.in/ என்ற இணைப்பில் கொள்குறி வகை கேள்விகளுக்கான போட்டி நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துக் கேள்வி கேட்கலாம். 

இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு:  mygov.in

 

Continues below advertisement