மருத்துவப் பேராசிரியர் ஆக நடத்தப்படும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (என்டெட்) விண்ணப்பிக்க இன்று (அக்.22ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.


சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்டெட் எனப்படும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (NTET), இந்திய சித்தா, ஆயுர்வேதம், யுனாமி மருத்துவப் படிப்புகளில் முதுகலைப் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றத் தகுதி ஆனவர்கள் ஆவர்.


விண்ணப்பக் கட்டணம்


பொதுப் பிரிவினர்-  ₹ 4000/-
EWS மற்றும் கிரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவினர்-  ₹ 3500/-
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் -  ₹ 3000/-


இன்றே கடைசி


இந்த நிலையில், தேர்வுக்கு செப்.24ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பக் கட்டணத்தை நாளை (அக்டோபர் 23ஆம் தேதி) வரை செலுத்தலாம்.


அதேபோல விண்ணப்பங்களில் திருத்தங்களை அக்.25ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். 120 நிமிடங்களுக்கு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இணைய வழியாக மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். 


விண்ணப்பிப்பது எப்படி?


* ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் https://ntet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


* முன் பதிவு செய்யாமல் இருந்தால், போதிய விவரங்களை உள்ளிட்டு முதலில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கு https://ntet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


* கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.nta.ac.inhttps://exams.nta.ac.in/NTET/ ஆகிய இணைப்புகளை க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


இதுகுறித்த முழுமையான அறிவிக்கையை https://exams.nta.ac.in/NTET/images/Information-Bulletein-NTET-2024.pdf என்ற இணைப்பில் பெறலாம்.


வேறு சந்தேகங்களுக்கு: 011 4075 9000


இ மெயில் முகவரி: ntet@nta.ac.in