கடந்த அக்டோபர் மாதம், வார விடுமுறைகள், தீபாவளி பண்டிகை, மழைக்கால விடுமுறை என மாணவர்கள் கொண்டாடும் மாதமாக இருந்தது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பாராத விடுமுறைகளை எக்கச்சக்க மகிழ்வோடு கொண்டாடினர்.
இந்த நிலையில், நவம்பர் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் என்னென்ன விடுமுறைகள், எத்தனை நாட்கள் என்று பார்க்கலாம்.
ஆச்சரியப்படுத்தும் விதமாக, நவம்பர் மாதம் இரு விடுமுறைகளோடு (நவம்பர் 1, 2) வந்தது. முடியும்போதும் இரண்டு நாட்கள் வார விடுமுறையோடு (நவம்பர் 29, 30) முடிகிறது.
குழந்தைகள் தினம்
அதேபோல நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதேபோல சில உள்ளூர் விடுமுறைகளும் அளிக்கப்படுகின்றன.
என்னென்ன தினங்கள்?
நவம்பர் 1 - தஞ்சாவூர் ராஜராஜ சோழன் ஐப்பசி சதய விழா
நவம்பர் 6 - நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம்
நவம்பர் 13 - திருவாரூர் முத்துப்பேட்டை பெரிய கந்தூரி திருவிழா
நவம்பர் 15 - மயிலாடுதுறை காவிரி கடைமுக தீர்த்தவாரி
எனினும் இவை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட விடுமுறைகளே. அதில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை போக, வாராந்திர சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் மழை காரணமாக கடந்த மாதங்களில் விடப்பட்டுள்ள விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக, சில பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை கிடையாது என்று தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதத்தில் 2ஆம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது.
நாளை வெளியாகும் பொதுத்தேர்வு அட்டவணை
இதற்கிடையே 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாக உள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டமும் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.