நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Fitter fresher ,Electrician fresher, Welder fresher , Medical Lab Technician Pathology,Medical Lab Technician Radiology ஆகியப் பிரிவுகளின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசிற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் தமிழ்நாட்டில் நெய்வேலியில் அமைந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், ) ஆண்டிற்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள்கள் இங்கு உற்பத்தியாகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல ஊழியர்கள் பணியாற்று வரும் நிலையில், தற்போது காலியாக உள்ள Fitter fresher , Electrician fresher, Welder fresher , Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology ஆகிய 75 காலிப்பணியிடங்களுக்கு Apprenticeship Training என்ற அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கு 10மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி உள்ளது எந்த தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிந்துக்கொள்வோம்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும் எனில், Fitter fresher பணிக்கு 10th Pass (2019/2020/2021 Batch) Electrician fresher பணிக்கு 10th Pass (2019/2020/2021 Batch)Welder fresher பணிக்கு 10th Pass (2019/2020/2021 Batch)Medical Lab Technician Pathology பணிக்கு 12th Std (Biology / Science Group)Medical Lab Technician Radiology பணிக்கு 12th Std (Biology / Science Group) முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை www.nlcindia.in என்ற இணையப்பக்கத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 18 மாலை 5 மணிக்கு வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களில் எந்த தவறும் இருக்கக்கூடாது எனவும், இப்பணிக்கு தேவையான அனைத்து வகையான ஆவணங்களையும் இதனுடன் இணைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை தகவல்களை தவறாகப் பதிவிடும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/2.FRESHER-NET-ADVERTISE-2021-22.pdf என்ற பக்கத்தில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம். இப்பணிகள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.8,766 - ரூ. 10,019 சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.