மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள தலைசிறந்த 100 கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 36 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


ஆண்டுதோறும்  தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework)  என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியல் இன்று காலை வெளியானது. இதில் தொடர்ந்து 5-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.  


கல்லூரி பெயர் - தரவரிசையில் பெற்றுள்ள இடம்


1. மாநிலக் கல்லூரி (Presidency College), சென்னை - 3
2. பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (PSGR Krishnammal College for Women), கோவை - 4 
3. லயோலா கல்லூரி (Loyola College), சென்னை - 7
4. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (Madras Christian College), சென்னை - 16
5. தியாகராஜர் கல்லூரி (Thiagarajar College ), மதுரை  -  18
6.பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (PSG College of Arts and Science ), கோவை-  20
7. செயின்ட் ஜோசப் கல்லூரி (St. Joseph's College), திருச்சிராப்பள்ளி - 25
8. வ.உ.சிதம்பரம் கல்லூரி (V.O. Chidambaram College), தூத்துக்குடி-  27
9. கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை (Kongunadu Arts & Science College )-  29
10. ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை (Sri Krishna Arts and Science College)-  33


இதில் கடைசியாக டாக்டர். ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, கோவை (Dr. G. R. Damodaran College of Science) 99ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


தமிழகத்தில் இருந்து மொத்தம் 36 கல்லூரிகள் தலைசிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள் மட்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.


முழு பட்டியலைக் காண: https://www.nirfindia.org/nirfpdfcdn/2023/pdf/Report/IR2023_Report.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.