தூத்துக்குடியில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 23 பேர் விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் மேற்கொண்டுள்ளனர். 




அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக உள்ள ஐஐடி போன்ற மத்திய அரசு படிப்புகளில் சேரும் கனவை நிறைவேற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெ.இ.இ .பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.திருச்சி என் ஐ டி நிறுவனம் இலவசமாக இந்த பயிற்சியை அளித்து வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று மாணவர்கள் சென்னை ஐஐடி-க்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். 




ஐஐடி எனும் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேருவது என்பது எட்டாத கனியாகவே இருந்தது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி அந்த மாவட்டத்தை சார்ந்த கல்லனை, களக்காடு, திருக்குறுங்குடி, பத்தமடை, செட்டிகுளம்,பேட்டை,அம்பை, முனஞ்சிப்பட்டி, கூடங்குளம், ஏர்வாடிஉள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 13 மாணவிகள் உட்பட 23 அரசு பள்ளி  மாணவர்கள் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றுள்ளனர். 


மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்வதற்காக பயிற்சி பெற்றுவரும் இந்த ஏழை மாணவர்கள் அங்குள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 




மாணவி சுவேதா கூறுகையில்,நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வருகிறோம்,எல்லாரும் அரசு மாணவர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தான் நாங்க கலெக்டர் சார் எங்களுக்கு கொடுத்த வாய்ப்பால்தான் இங்கே வந்து நிற்கிறோம். நினைச்சு கூட பாக்கல எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா யோசிக்கவே முடியாத அளவில் தான் எங்களுடைய குடும்ப சூழ்நிலை உள்ளது. இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எங்களுக்கு பெரிய விஷயம் நாங்க அனைவருமே அதிர்ஸ்டம் ஆனவர்கள்.விமானத்தில் செல்வது ஒரு கனவாக இருந்த நிலையில் இப்பொழுது நானும் விமானத்தில் செல்வது அரசுப் பள்ளிகள் மாணவராகிய எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.




மாணவி முத்துலட்சுமி கூறுகையில்,அரசுப் பள்ளி மாணவர்களால் முடியாதது எதுவுமில்லை எங்களால் முடியும் என்பதால் எங்களுக்கு பயிற்சி அளித்து எங்களை தூத்துக்குடியிலிருந்து சென்னை ஐஐடிக்கு அனுப்பி வைப்பதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நாங்கள் தற்போது ஐஐடி பயிற்சி நிறுவனத்தை பார்க்க செல்வதன் மூலம் எங்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படும் நாங்கள் நிச்சயமாக ஐஐடி மாணவர்களாக உருவாகி சாதனை படைப்போம் என்று கூறினார்.


இவர்கள் இரண்டு நாள் சென்னை ஐஐடியில்  இருந்தவாறு கோளரங்கம், ஆய்வகங்கள்  பார்வையிட்டு அங்குள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்வார்கள்.
இதுகுறித்து மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.