2026ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மறு தேர்வு முடிவுகள் ஜூலை 16ஆம் தேதி வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு மனநல ஆலோசனை தேவைப்பட்டால் அழைக்க, தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது கூறி உள்ளதாவது:

''தமிழ்நாடு அரசின் ’நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104-ஐ அழைக்கவும். 2026- 27ஆம் கல்வியாண்டின் நீட் தேர்வுகள் அண்மையில் வெளியாகி உள்ளன.

Continues below advertisement

நட்புடன் உங்களோடு

மாணவர்களின் மன உறுதி காக்கும் மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது''.

இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் மறு தேர்வின் முடிவுகளைத் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டது. இந்தியாவில் 551 மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 இடங்கள் என மொத்தம் 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்காக மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

பெண்களின் ஆதிக்கம்

13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 17 முதல் 19 வயதுடைய தேர்வர்களே 99 சதவீதத்தினர் ஆவர். முதன்முறையாகத் தேர்வை எழுதியவர்களில் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் 58 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர். இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.