இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை தற்போது வெளியிட்டுள்ள நிலையில், மகேஷ் குமார் என்னும் ராஜஸ்தான் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஒட்டுமொத்த அளவில் 99.9999547 பர்சண்டைல் பெற்றுள்ளார். 

Continues below advertisement


நாடு முழுவதும் மொத்தம் 22,76,069 தேர்வர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், 22,09,318 பேர் தேர்வை எழுதினர். இதில், 12,36,531 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் சாதனை படைத்த மாணவர்களின் விவரங்களை அறியலாம்.


தமிழ்நாட்டில் எத்தனை டாப்பர்கள்?


 நீட் தேர்வு முடிவுகளில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள் இடம்பிடித்து உள்ளனர். சூர்யநாராயணன் 99.9987779 பர்சண்டைலுடன் 27ஆம் இடத்தில் உள்ளார்.


மாணவர் அபினீத் நாகராஜ் 99.9974653 பர்சண்டைல் பெற்று 50ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல மாணவர் புகழேந்தி 61ஆவது இடத்தையும் (99.9972390) மாணவர் ஹ்ருதிக் விஜய ராஜா 63ஆவது இடத்தையும் (99.9971484) பெற்றுள்ளனர்.


அதேபோல ராகேஷ் என்னும் மாணவர் 78ஆம் இடத்தையும் மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 88ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


நீட் தேர்வு முடிவுகளை இணையத்தில் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?



  • நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-ஐ க்ளிக் செய்யவும்.

  • அதில் https://examinationservices.nic.in/resultservices/Neet2025/Login என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  • நீட் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.

  • அதில் மேலும் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.

  • உடனே, தேர்வு முடிவு அடங்கிய பிடிஎஃப் கோப்பு திறக்கும்.

  • உங்கள் பெயர் மற்றும் மதிப்பெண்களைச் சரிபார்க்கவும்.

  • எதிர்கால குறிப்புக்காக கோப்பைச் சேமிக்கவும்.