இளங்கலை நீட் தேர்வு இறுதி விடைக் குறிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்ட நிலையில், தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகளை 4 வழிகளில் பார்க்க முடியும். எப்படி? கீழே காணலாம்.

  • தேர்வர்களின் இ மெயில் முகவரிக்கே நேரடியாக மதிப்பெண் அட்டைகள் அனுப்பப்படும்.
  • neet.nta.nic.in  மற்றும் nta.ac.in என்னும் இணைய தளங்கள்
  • UMANG தளம்
  • டிஜி லாக்கர் செயலி (DigiLocker)

 

முன்னதாக இன்று காலை இறுதி விடைக் குறிப்புகள் வெளியாகி இருந்தன. இவற்றைத் தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/06/2025061450.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

இணையத்தில் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-ஐ க்ளிக் செய்யவும்.
  • அதில் https://examinationservices.nic.in/resultservices/Neet2025/Login என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • நீட் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • அதில் மேலும் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
  • உடனே, தேர்வு முடிவு அடங்கிய பிடிஎஃப் கோப்பு திறக்கும்.
  • உங்கள் பெயர் மற்றும் மதிப்பெண்களைச் சரிபார்க்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக கோப்பைச் சேமிக்கவும்.

கடினமாக இருந்த நீட் தேர்வு

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இளங்கலை நீட் தேர்வு கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் கூறி இருந்தனர். குறிப்பாக இயற்பியல் பாடம் மிகவும் கடினமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் உயிரியல் பாடம் ஒப்பீட்டளவில் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.

கூடுதல் தகவல்களுக்கு: neet.nta.nic.in